செப்டம்பர் 9-இல் ‘ஜுவாலான் இஹ்சான் ரஹ்மா 9.9’ ஆன்லைன் விற்பனை: பிரதமர் அறிவிப்பு!

கோலாலம்பூர்:

ரவிருக்கும் மலேசியா தினக் கொண்டாட்டத்தையொட்டி, செப்டம்பர் 9-ஆம் தேதி ‘Jualan Ihsan Rahmah 9.9’ ஆன்லைன் விற்பனை நடத்தப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ‘டிக் டாக் ஷாப் உச்சிமாநாடு 2026’ (TikTok Shop Summit Malaysia 2026) நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர், முதன்முறையாக ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும் இந்த சிறப்பு விற்பனை பிரசாரத்தின் மூலம், நாடு முழுவதிலும் உள்ள பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை மலிவான விலையில் வாங்குவதற்கான வாய்ப்பைப் பெறுவர் என்றார்.

சுதந்திர தினம் மற்றும் மலேசியா தின உணர்வுகளையும் TikTok Shop முன்னெடுத்துள்ள முயற்சிகளையும் கருத்தில் கொண்டு, இந்த ‘ஜுவாலான் இஹ்சான் ரஹ்மா 9.9’ ஆன்லைன் விற்பனை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

இந்த நன்மைகள் அடங்கிய திட்டத்தை மக்கள் அனைவரும் அறிந்துகொண்டு, இதன் மூலம் வழங்கப்படும் விலைக் குறைப்புச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பரவலாகப் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும்.

உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் (KPDN) தலைமையின் கீழ் செயல்படும் ‘ரஹ்மா விற்பனை திட்டம்’ (Program Jualan Rahmah), மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களுக்கு 10% முதல் 30% வரை தள்ளுபடி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here