புகைமூட்ட அவசரநிலை நீக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, செரியான் மீண்டும் அபாயகரமான மண்டலத்திற்குள் நுழைந்தது

கடந்த வெள்ளிக்கிழமை சரவாக் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட அவசரநிலை நீக்கப்பட்ட ஒரு நாளுக்குள், செரியான் இன்று காலை மீண்டும் அபாயகரமான காற்று மாசுபடுத்தி குறியீட்டு (API) பிரிவுக்குள் திரும்பியது. காற்று மாசுபடுத்தி குறியீட்டு மேலாண்மை அமைப்பு இணையதளத்தின்படி, காலை 9 மணி நிலவரப்படி, IPD செரியான் கண்காணிப்பு நிலையத்தில் API அளவீடு 302 ஆக இருந்தது.

சரவாக்கில் உள்ள மேலும் மூன்று பகுதிகளான கூச்சிங் (249), ஸ்ரீ அமான் (235) மற்றும் சமரஹான் (233) ஆகியவை மிகவும் ஆரோக்கியமற்ற API அளவீடுகளைப் பதிவு செய்துள்ளன. நாடு முழுவதும் மேலும் 24 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றின் தரம் பதிவாகியுள்ளது. சரவாக்கில் இந்தப் பிரிவில் ஆறு பகுதிகள் பதிவாகியுள்ளன: முகா (184), சரிகேய் (183), சமலாஜு (178), பிந்துலு (170), ILP மிரி (169) மற்றும் மிரி (165).

சிலாங்கூரில் ஜோஹன் செத்தியா (168), ஷா ஆலம் (164), பந்திங் (159), கிள்ளான் (156), பெட்டாலிங் ஜெயா (154), கோலா சிலாங்கூர் (152) ஆகிய 6 இடங்களிலும்  பேராகில் தாசேக் ஈப்போ (161), ஶ்ரீ மஞ்சோங் (159), தஞ்சோங் மாலிம் (156) மற்றும் பெகோ ஈப்போ (152) ஆகிய நான்கு இடங்களிலும் கோலாலம்பூரில் பத்து மூடா (158), செராஸ் (155) ஆகிய இடங்களிலும் நெகிரி செம்பிலானில் நீலாய் (157), சிரம்பானிலும் (152), மலாக்கா அலோர் ஜாஜா (143), புக்கிட் ரம்பாய் (141), புத்ராஜெயா (155) மற்றும் லாபுவான் (118) ஆகியவை ஆரோக்கியமற்ற பிரிவில் உள்ள மற்ற பகுதிகள். இதற்கிடையில், 36 பகுதிகள் மிதமான காற்றின் தரத்தை பதிவு செய்தன, இரண்டு பகுதிகள் நல்ல பிரிவில் இருந்தன.

0 முதல் 50 வரையிலான API வாசிப்பு நல்ல காற்றின் தரத்தைக் குறிக்கிறது; 51 முதல் 100 வரை, மிதமானது; 101 முதல் 200 வரை, ஆரோக்கியமற்றது; 201 முதல் 300 வரை, மிகவும் ஆரோக்கியமற்றது; மற்றும் 300-க்கு மேல், அபாயகரமானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here