நாடுமுழுவதுமுள்ள 38 இடங்களில் காற்றுத் தரம் மோசம் – சரவாக்கின் செரியான் முதலிடம்!

கோலாலம்பூர்:

மலேசியா முழுவதும் புகைமூட்டத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் 38 பகுதிகள் ஆரோக்கியமற்ற காற்றுத் தரக் குறியீட்டைப் (IPU) பதிவு செய்துள்ளன.

காற்றுத் தர மேலாண்மை அமைப்பின் (APIMS) தரவுகளின்படி, இன்று காலை 9.40 மணி நிலவரப்படி சரவாக்கின் செரியான் மாவட்டம் 188 எனும் புள்ளிகளுடன் நாட்டின் மிக மோசமான காற்றுத் தரப் பதிவை எட்டியுள்ளது.

இதில் மோசமான காற்றழுத்தம் கொண்ட முக்கிய இடங்களாக செரியான் (188), ஜோஹான் செத்தியா (182)165 – 171 புள்ளிகள்: செராஸ் (171), பாசிர் கூடாங் (171), ஷா ஆலாம் (168), நிலாய் (168), லார்க்கின் (168), தங்காக் (167), புத்ராஜாயா (166), சிரம்பான் (165), கோத்தா திங்கி (165), சமராஹான் (163), பத்து மூடா (162), பாலோ பாரு குவாந்தான் (162), பத்து பஹாட் (161), பெங்கெராங் (161), இந்திரா மஹ்கோத்தா (161), பெத்தாலிங் ஜெயா (160), கிள்ளான் (160), அலோர் காஜா (159), தஞ்சோங் மாலிம் (158), பண்டிங் (157), கெமாமன் (157), கோலா சிலாங்கூர் (156), புக்கிட் ரம்பாய் (156), தெமர்லோ (156), பாகா (156), ஜெராந்துட் (155), செரி மஞ்சோங் (154), கோலா திரங்கானு (154), கூச்சிங் (154), குளுவாங் (152), ரொம்பின் (152), தாசேக் ஈப்போ (151), போர்ட் டிக்சன் (151), பாலிக் பூலாவ் (141), மின்டன் (118), சுங்கை பட்டாணி (117) ஆகிய பகுதிகளும் உள்ளன.

மேலும், நாட்டின் 30 இடங்கள் ‘மிதமான’ (Sederhana) காற்றுத் தரப் பதிவைக் கொண்டுள்ளன.

பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும், வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணியுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  • இதில் காற்றுத் தரக் குறியீடு (IPU) வழிகாட்டி:
  • 0 – 50: நன்று (Baik)
  • 51 – 100: மிதம் (Sederhana)
  • 101 – 200: ஆரோக்கியமற்றது (Tidak Sihat)
  • 201 – 300: மிகவும் ஆரோக்கியமற்றது (Sangat Tidak Sihat)
  • 301-க்கு மேல்: ஆபத்தானது (Berbahaya)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here