முன்னாள் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் குடும்பத்திற்கு MACC அதிரடி உத்தரவு: சொத்து விவரங்களை அறிவிக்க நோட்டீஸ்!

கோலாலம்பூர்:

முன்னாள் மனிதவள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன், அவரது மனைவி மற்றும் 3 பிள்ளைகள் ஆகியோருக்கு தங்களின் சொத்து விவரங்களை அறிவிக்குமாறு கோரும் அதிகாரப்பூர்வ நோட்டீஸை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) வரும் திங்கள்கிழமை வழங்கவுள்ளது.

MACC சட்டத்தின் பிரிவு 36-இன் கீழ் (Section 36) இந்த நோட்டீஸ்கள் பிறப்பிக்கப்படவுள்ளதாக ஊழல் தடுப்பு ஆணையத் தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அப்துல் ஹலீம் அமான் தெரிவித்துள்ளார்.

“டத்தோஸ்ரீ எம். சரவணன், அவரது மனைவி மற்றும் இரு பிள்ளைகள் திங்கள்கிழமை MACC தலைமையகத்திற்கு வருகை தந்து நோட்டீஸைப் பெற்றுக்கொள்வார்கள். லண்டனில் உயர்கல்வி கற்று வரும் அவரது மற்றொரு மகனுக்கு வரும் நவம்பர் மாதம் நோட்டீஸ் வழங்கப்படும். இது குறித்து அவர்களிடம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுவிட்டது” என்று, டத்தோஸ்ரீ அப்துல் ஹலீம் அமான் தெரிவித்துள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு RM1.097 மில்லியன் லஞ்சப் பணத்தைப் பெற்றதாகக் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் டத்தோஸ்ரீ எம். சரவணன் மீது 3 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், அவர் அக்குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here