சிங்கப்பூர் டென்னிஸ் பொது தொடரின் அரையிறுதிப் போட்டியில் கனடாவின் லேலா பெர்னாண்டஸ் வெற்றி பெற்றார். சிங்கப்பூர் டென்னிஸ் பொது தொடர் சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிப் போட்டிகள் நேற்று நடந்தன. இதில் ஆஸ்திரேலியாவின் டாலியா கிப்சன், ரஷ்யாவின் புரோஜோரோவா உடன் மோத இருந்தார். காயம் காரணமாக ரஷ்ய வீராங்கனை வெளியேறியதால் டாலியா கிப்சன் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் கனடாவின் லேலா பெர்னாண்டஸ் 1-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் போலந்தின் சாவ்லின்ஸ்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.








