கோலாலம்பூர்:
நாளை முதல் ரோன்97, மானியமில்லா ரோன்95 பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருள்களின் சில்லறை விலைகள் குறைக்கப்படுவதாக மலேசிய நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, ரோன்97 பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 சென் குறைந்து RM5.00 ஆகவும், மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 சென் குறைந்து RM4.52 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, மானியமில்லா டீசல் விலை லிட்டருக்கு 15 சென் குறைக்கப்பட்டு RM5.27 ஆக விற்பனை செய்யப்படும்.
otofacts
“BUDI95 திட்டத்தின் கீழ் மானியம் பெறும் ரோன்95 பெட்ரோல் லிட்டருக்கு RM1.99 ஆகவும், புடி டீசல் திட்டத்தின் கீழ் டீசல் லிட்டருக்கு RM2.10 ஆகவும் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து அதே விலையில் விற்பனை செய்யப்படும். இந்த புதிய எரிபொருள் விலைகள் வரும் அக்டோபர் 7-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்” என்று நிதி அமைச்சு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
















