16 கைத்துப்பாக்கிகளை கிளந்தான் போலீசார் கைப்பற்றினர்

கோத்தாபாரு:

இந்த ஆண்டு கிளாந்தானில் துப்பாக்கிப் பாவனை அதிகரித்திருக்கின்றது. 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒன்பது கைத்துப்பாக்கிகலே கைப்பற்றப்பட்டன. இந்த ஆண்டு இதுவரை 16 வகையான கைத்துப்பாக்கிகளை கிளந்தான் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

16 வழக்குகளில் 14 வழக்குகள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹாருன் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளில் பெரும்பாலானவை போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டவை என்றும், குறிப்பாக எல்லைப் பகுதிகளில் போலீஸார் அதிக கவனம் செலுத்துவார்கள் என்றும், சோதனைகள் மற் றும் சாலைத் தடைகள் உள்ளிட்ட பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான சிறந்த வழி களைக் கண்டறிவதில் முனைப்புக் காட்டி வருகிறோம் என்றும் அவர் கூறினார்.

“அண்டை நாடுகளில் இருந்து ஆயுதங்கள் வாங்கப்பட்டு, சட்டவிரோத தளங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதை அறிந்துள்ளோம். நாங்கள் தாய்லாந்து அதிகாரிகளுடன் தொடர்ந்து ஒத்துழைத்து தகவல் பரிமாற்றம் செய்து வருகிறோம். எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற் கொள்கிறோம் ” என்று இன்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here