டர் எஸ் சலாம், தான்சானியாவில் லாரி மீது பஸ் மோதிய கோர விபத்தில் 28 பேர் உயிரிழந்தனர்.
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு தான்சானியா. இந்நாட்டின் தலைநகர் டர் எஸ் சலாம் நகரில் இருந்து எம்பெயா நகருக்கு இன்று அதிகாலை பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.














