
அரசுப் பணியில் ஏறக்குறைய 30 ஆண்டுகால அனுபவம் கொண்ட ஜனா சந்திரனின் தொழில் பயணம், தகுதி, அனுபவம், நேர்மை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அரசுப் பணியில் முன்னேற முடியும் என்பதற்குச் சான்றாக விளங்குகிறது.போக்குவரத்து அமைச்சின் தமிழ் ஊடகவியலாளர்களுடனான தீபாவளி சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை இந்தியா கேட் உணவகத்தில் நடைபெற்றது. மக்கள் ஓசை நிர்வாக இயக்குனர் டத்தோ ச. கோபாலகிருஷ்ணனும் கலந்துகொண்டு சிறப்பித்த இந்நிகழ்ச்சியில் பேசியபோது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனா சந்திரன் தற்போது போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றுவதுடன், ரயில்வே சொத்துக் கழகத்தின் இயக்குநர் வாரியத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். இதற்கு முன்னர் இளைஞர், விளையாட்டு அமைச்சின் தலைமைச் செயலாளராகவும், பல்வேறு அமைச்சுகளில் முக்கியப் பொறுப்புகளிலும் பணியாற்றியுள்ளார்.இந்திய சமூகத்தினரின் பங்களிப்பு வணிகம், தொழில்முறைத் துறைகள், தனியார் துறை ஆகியவற்றுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது என்று அந்தோணி லோக் கூறினார். பொது நிர்வாகம், தூதரகம், கொள்கை வகுத்தல், அரச நிறுவனங்களின் தலைமைத்துவம் ஆகிய துறைகளிலும் இளைஞர்கள் பங்களிக்க வேண்டும் என்றார்.

இதற்காக இந்திய மாணவர்கள், பட்டதாரிகள் மத்தியில் அரசுப் பணிகள் குறித்த விழிப்புணர்வு, வழிகாட்டுதல், தொழில் வாய்ப்புகள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நாட்டின் நிர்வாகத்தில் இந்திய சமூகத்தினர் பங்கேற்பதுடன், கொள்கை வகுத்தல், தலைமைத்துவம், நாட்டின் எதிர்காலத் திசையைத் தீர்மானித்தல் ஆகியவற்றிலும் பங்காற்ற வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.















