சமூக வலைதளத்தில் சர்ச்சை பதிவு: நடிகை கங்கனா ரனாவத் மீது போலீசார் வழக்குப்பதிவு!…

சோனியா காந்தி குடும்பத்தினரை விமர்சித்து கங்கனா ரனாவத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் பதிவுகள் பொதுமக்களிடையே மோதலை தூண்டும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் இருப்பதாகக் கூறி புகார் அளிக்கப்பட்டது.

சிம்லாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி அதுல் சர்மா என்பவர், கடந்த 12-ந்தேதி இமாசல பிரதேச காவல்துறை இயக்குநர் ஜெனரலுக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தார். அதில், முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் சஞ்சய் காந்தி ஆகியோரின் மரணங்கள் குறித்து கங்கனா வெளியிட்ட பதிவுகளில் சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி குறித்தும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சிம்லா போலீசார் கங்கனா ரனாவத் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 196, 353 மற்றும் 356 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை சிம்லா காவல் கண்காணிப்பாளர் கவுரவ் சிங் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here