பினாங்கில் உள்ள டேப் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததால் பெரும் தீ; 80 தொழிலாளர்கள் வெளியேற்றம்

கோலாலம்பூர்:

ட்டர்வொர்த்தில் உள்ள பிறை தொழிற்பேட்டையில் உள்ள டேப் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

நேற்று மாலை 4.40 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தால், வானத்தில் அடர்ந்த கரும் புகை கிளம்பி, அருகில் வசிப்பவர்களையும், வாகன ஓட்டிகளையும் பீதிக்குள்ளாக்கியது.

குறித்த தீப்பரவல் பற்றிய அவசர அழைப்பு கிடைத்தவுடன் தீயணைப்பு வீரர்கள் மற்றும் தன்னார்வ தீயணைப்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், அந்த நேரத்தில் சுமார் 80 தொழிலாளர்கள் தொழிற்சாலையின் அலுவலகம் மற்றும் வளாகத்திற்குள் இருந்தனர் என்றும், அவர்களின் பாதுகாப்பிற்காக அனைவரும் அப்பகுதியைவிட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர் என்று சுங்கை புயூ தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தனது facebook இல் நேற்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்த சம்பவத்தின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here