LRT ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் நிர்வாண நிலையில் ஆண் சடலம் மீட்பு!

பெட்டாலிங் ஜெயா, 

சிலாங்கூர், பாண்டான் ஜெயா LRT ரயில் நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இன்று காலை நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காலை சுமார் 7.30 மணியளவில் போலீஸ் அதிகாரி ஒருவர், அந்த நபர் முகம் தரையில் படும்படி கிடந்ததைக் கண்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் கைருல் அனுவார் காலிட் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ அதிகாரி, அந்த நபர் உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் அம்பாங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரை உயிரிழந்த நபரின் அடையாளம் கண்டறியப்படாத நிலையில், அவரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை போலீசார் நாடியுள்ளனர்.

குடும்ப உறுப்பினர்கள் அல்லது தெரிந்தவர்கள் யாரேனும் காணாமல் போயிருந்தால், அது தொடர்பான தகவல்களை போலீசாரிடம் தெரிவிக்குமாறு கைருல் அனுவார் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here