பாலஸ்தீன ஒற்றுமை வாரம்: சில மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்வதை தவிர்க்கின்றனர்

பெட்டாலிங் ஜெயா:

சில பெற்றோர்கள் பாலஸ்தீன ஒற்றுமை வாரத்தில் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர்.

பள்ளிகள் இம்மாதிரியான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது கட்டாயமில்லை என்றா லும், எங்கள் குழந்தைகளை கண்காணித்துக்கொள்ள வேண்டியிருப்பதால் இந்த முடிவை எடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

மலாக்காவைச் சேர்ந்த 48 வயதான லியூ எனும் ஒரு பெற்றோர், தனது மகள் குறித்து வருத்தமடைவதாக கூறினார். அதாவது, ஆசிரியர்கள் இதைப் பற்றி அலட்சியமாக இருக்கும்போது சில மாணவர்கள் நாட்டின் பெயர்கள் அல்லது கொடிகளை மிதிக்க சொன்னதாகவும், ஒழுக்கத்தை மேம்படுத்தும் பள்ளிகளில் இது போன்ற சம்பவங்கள் மாணவர்களை குழப்படைய செய்யும் அல்லவா என்கிறார் அவர்.

பிரச்சினையின் சிக்கலான தன்மையை என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. முறையற்ற முறையில் கையாளப்பட்டால், இது நமது சமூகத்தில் மேலும் பிளவுக்கு வழிவகுக்கும், என்றும் அவர் கூறினார்.

மற்றும் பல பெற்றோர்கள் இந்த கவலைகளை நிவர்த்தி செய்ய பள்ளி தலைமை ஆசிரியரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால், நாங்கள் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம். குறிப்பாக வன்முறைகள், மற்றும் போர்க்குற்றங்கள் சார்ந்த எண்ணங்களை வளர்ப்பதிலிருந்து பள்ளிகள் வெளியேற வேண்டும் என்றனர்.

பாலஸ்தீனிய-இஸ்ரேலிய மோதலைப் பற்றி மாணவர்களுக்குக் கற்பிக்க ஒரு விரிவான மற்றும் சமநிலையான முன்னோக்கு தேவை, ஒடுக்கப்பட்ட மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்துவதும், போர்களைக் கண்டிப்பதும் முக்கியம் என்றாலும், நம் குழந்தைகளை ஒரு நிலைப்பாட்டை எடுக்க கட்டாயப்படுத்தக்கூடாது.

எனது எட்டு வயது மகன் இப்போது இதைப் புரிந்து கொள்ள மிகவும் சிறியவன் என்று நினைக்கிறேன். அவர் பெரியவராக இருக்கும்போது அதைப் பற்றி பின்னர் அறிந்து கொள்ளலாம், என்கிறார் ஒரு பெற்றார்.

அக்டோபர் 26 அன்று, கல்வி அமைச்சகம் பாலஸ்தீன ஒற்றுமை வாரத்தை அக்டோபர் 29 முதல் நவம்பர் 3 வரை நடத்துவதாக அறிவித்தது.

பள்ளிகள், தொழிற்கல்வி மற்றும் மெட்ரிகுலேஷன் கல்லூரிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உட்பட அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்த நிகழ்வில் ஈடுபடுகின்றன.

இந்த அறிவிப்பு விவாதங்களைத் தூண்டியுள்ளது மற்றும் கவலைகளை எழுப்பியுள்ளது, குறிப்பாக ஒரு பள்ளி நிகழ்ச்சியின் போது ஒரு மனிதனை தீவிரவாதியாக உடை யணிந்து, போலித் துப்பாக்கியை ஏந்திய வீடியோ கிளிப் சமூக ஊடக தளங்களில் வைர லானதை அடுத்து, பெற்றோர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலளித்த அமைச்சகம், பாலஸ்தீன ஒற்றுமை வாரத்தை அதன் எல்லைக்கு உட்பட்ட அனைத்து நிறுவனங்களிலும் நடத்தும் போது தீவிரவாதம் மற்றும் வன் முறையின் கூறுகளை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று கூறியது.

குழந்தைகள் உளவியலாளரும் கல்வியாளருமான டத்தோ டாக்டர் சியாம் ஹெங் கெங், பள்ளிகளில் எந்த வகையான அரசியலையும் தடை செய்ய வேண்டும் மற்றும் பாடத் திட்டத்தில் இருந்து அத்தகைய தலைப்புகளை விலக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here