டுரின்:
இத்தாலியின் டுரின் நகரில், ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. உலகின் ‘டாப்–8’ வீரர்கள் இதில் இரு பிரிவுகளாக பங்கேற்கின்றனர். இவான் லெண்டில் பிரிவில் நடந்த லீக் போட்டியில், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், அமெரிக்காவின் தியபோவை எதிர்கொண்டார். இதில் அல்காரஸ், 6–2, 6–2 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்றார்.
இதே பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் ரஷ்யாவின் டேனில் மெத்வடேவ், இத்தாலியின் கோபோல்லி மோதினர். இதில் மெத்வடேவ் 7–6, 6–3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.















