சிவசங்கரி ஈன் யோவ் சீன ஓபன் ஸ்குவாஷ் போட்டி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்

பெட்டாலிங் ஜெயா: உலகத் தரவரிசையில் 4ஆவது இடத்தில் உள்ள ஸ்குவாஷ் நட்சத்திர வீராங்கனை எஸ். சிவசங்கரி, இன்று சீனாவின் ஷாங்காயில் நடைபெற்று வரும் சீன ஓபன் ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் எகிப்து வீராங்கனை மாலக் கஃபாகியை வீழ்த்தி வெற்றியுடன் தனது ஆட்டத்தைத் தொடங்கினார்.

முதல் நிலை வீராங்கனையாகக் களமிறங்கிய சிவசங்கரி, முதல் 32 வீராங்கனைகளுக்கான சுற்றில் நேரடியாக அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்தார். இருப்பினும், 38ஆவது இடத்தில் உள்ள மாலக் கஃபாகியிடமிருந்து கடுமையான சவாலை எதிர்கொண்ட அவர், இறுதியில் 11-7, 8-11, 11-8, 11-8 என்ற புள்ளிக் கணக்கில் 44 நிமிடங்களில் வெற்றி பெற்றார்.

வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில், கெடா மாநிலம் சுங்கை பட்டாணியைச் சேர்ந்த சிவசங்கரி, உலகத் தரவரிசையில் 16ஆவது இடத்தில் உள்ள மற்றொரு எகிப்து வீராங்கனையான ஃபரிதா முகமதுவை எதிர்கொள்ளவுள்ளார்.

ஃபரிதா, இரண்டாவது சுற்றில் மலேசியாவின் இளம் வீராங்கனையும் உலகத் தரவரிசையில் 26ஆவது இடத்தில் உள்ளவருமான ஐரா அஸ்மானை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றைக் கடந்தார். இப்போட்டியில் அவர் 8-11, 11-9, 11-6, 11-9 என்ற புள்ளிக் கணக்கில் 38 நிமிடங்களில் வெற்றி பெற்றார்.

இதற்கிடையில், உலகத் தரவரிசையில் 16ஆவது இடத்தில் உள்ள மலேசிய வீரர் நிக் ஈன் யோவும் காலிறுதிக்கு முன்னேறினார். அவர் பிரான்ஸ் வீரரும் உலகத் தரவரிசையில் 22ஆவது இடத்தில் உள்ளவருமான மெல்வில் ஸ்கியானிமானிக்கோவை 11-7, 11-8, 11-7 என்ற நேர்செட் கணக்கில் 56 நிமிடங்களில் தோற்கடித்தார்.

நாளை நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில், உலகின் முதல்நிலை வீரரும் எகிப்தைச் சேர்ந்தவருமான முஸ்தஃபா அசாலை எதிர்கொள்ளவுள்ள ஈன் யோவுக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here