கோலாலம்பூர்:
மலேசியாவில் சமூகத்தின் அனைத்துத் தரப்புகளிலும் ஊழல் பரவியுள்ள நிலையில், அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து உறுதியுடன் முன்னெடுக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
ஊழலை ஒழிப்பதற்கு அனைத்துத் தரப்பினரின் தொடர்ச்சியான ஒத்துழைப்பும் உறுதியான அர்ப்பணிப்பும் அவசியம் என்று குறிப்பிட்ட அவர், இளம் தலைமுறையினரிடையே நேர்மை மற்றும் நல்லொழுக்கத்தை வளர்ப்பதும் முக்கியம் என்றார்.
நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பில் ஊழல் ஆழமாக வேரூன்றியுள்ளதால், அதனை எதிர்த்துப் போராடுவது எதிர்பார்த்ததைவிட சவாலாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு வரவேற்பு கிடைக்கிறதா என்பதைப் பொருட்படுத்தாமல், ஊழலுக்கு எதிராகத் துணிச்சலான முடிவுகளை எடுத்து தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
நேற்றிரவு டிவி1 அலைவரிசையில் ஒளிபரப்பான தேசிய அளவிலான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசியபோது அன்வார் இவ்வாறு தெரிவித்தார்.
“நாட்டில் சமூகத்தின் அனைத்துத் தரப்புகளிலும் ஊழல் பரவியுள்ளது. அதனை எதிர்கொள்ளும் பொறுப்பைத்தான் நான் ஏற்றுக்கொண்டுள்ளேன். வரவேற்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் உறுதியுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும். பிரபலமாக இருப்பது இரண்டாம்பட்சம்தான்,” என்று அவர் கூறினார்.
இதனிடையே, ஊழலற்ற எதிர்காலத்தை உருவாக்குவதில் இளம் தலைமுறையினரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
உயர்கல்வி நிலையங்களில் நடைபெற்ற கலந்துரையாடல்கள் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளின் வாயிலாக இளைஞர்களிடையே நேர்மையையும் நல்ல விழுமியங்களையும் வளர்க்கத் தாம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
“இளைஞர்கள் தங்களது கொள்கைகளில் உறுதியாக இருக்க வேண்டும். அவர்கள்தான் நமது நம்பிக்கை. Gen Z, Gen Y தலைமுறையினரிடையே நல்ல விழுமியங்களை வளர்த்துவிட்டால், நாட்டின் எதிர்காலம் மேலும் உறுதியா






















