தற்கொலைக்கு முயற்சித்து உயிருக்கு போராடிய பிரபல பாடகி கோக்கோ லீ மரணம்

ஹாங்காங்கில் பிறந்த கோக்கோ லீ (48) கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிற்க்கு குடும்பத்தோடு குடிபெயர்ந்தார். அங்கு உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்த பின் ஹாங்காங்கிற்குச் சென்றபோது, அவர் ஒரு பாடல் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றார்.

இது அவரது இசை வாழ்க்கையைத் தொடங்கியது. 1990கள் முழுவதும் ஆசியாவில் அவர் பெரும் வெற்றி கண்டார். சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் ஆஸ்கார் விருது வரை சென்றுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் மன உளைச்சல் காரணமாக தற்கொலைக்கு முற்சித்தார். இதில் அவர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டர். இதில் இவர் கோமா நிலைக்கு சென்றார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். அவரது மறைவு இசை ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here