கிளாந்தானில் அம்னோ 31, அமானா 7, பிகேஆர் 7 ஆகிய தொகுதிகளில் போட்டி

கோத்தா பாரு:

அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலில், கிளாந்தான் மாநிலத்தில் அம்னோ 31 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும். அதே நேரத்தில் பக்காத்தான் ஹராப்பான் 14 இடங்கள், அதாவது அமானா மற்றும் பிகேஆர் தலா 7 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

ஏற்கனவே அம்னோ போட்டியிட்ட தொகுதிகளான, கோக் லானாஸ் சட்டமன்ற தொகுதி, குவால் ஈப்போ, புக்கிட் புங்கா, நெகிரி, கோலா பாலா, பலோ மற்றும் கலாஸ் ஆகிய ஏழு இடங்களை அம்னோ கைப்பற்றியது.

மேலும் தற்போதுள்ள இடத்தைப் பாதுகாப்பது கட்சிக்கு ஒரு பிரகாசமான வாய்ப்பாகக் கருதப்படுகிறது, ஆனால், PAS தலைமையிலான மாநிலமான கிளாந்தானைக் கைப்பற்றும் அம்னோவின் நோக்கம், வாக்குப்பதிவு நாளுக்கு இன்னும் 33 நாட்கள் எஞ்சியிருக்கும் நிலையில் வெற்றிபெறுமா என்று, பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here