வடக்கு பிலிப்பைன்ஸில் உள்ள படானஸ் மாகாணத்தில் இன்று காலை 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
உள்ளூர் நேரப்படி காலை 9:43 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், சப்டாங் நகருக்கு தென்மேற்கே 38 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் தாக்கியதாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் இல்லோகோஸ் நோர்ட் (Ilocos Norte) மாகாணத்தில் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் மூலம் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. பசிஃபிக் “ரிங் ஆஃப் ஃபயர்” என்னும் அமைப்பில் பிலிப்பைன்ஸ் நாடு அமைந்துள்ளதால் அடிக்கடி நில அதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது





















