புதிய அமைச்சரவைக்கு வாழ்த்துக்கள்! எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி -வ. சிவகுமார்

புத்ரா ஜெயா, 

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அமைச்சரவை மாற்றத்தை அறிவித் துள்ளார்.

இதில் எனக்கு பதிலாக சகோதரர் ஸ்டீவன் சிம் புதிய மனிதவள அமைச்சராக இடம் பெற்றுள்ளார்.

அவர் உட்பட புதிதாக அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் புதிய அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் மனிதவள அமைச்சராக பணியாற்றிய இந்த ஓர் ஆண்டு காலத்தில் எனக்கு முழு ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் மனமார்ந்த நன்றி களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் முன் னாள் மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here