பிக்பாஸ் பிரபலத்திற்கு எதிராக பாலியல் வழக்கு

பாலியல் வழக்கு தொடர்பாக பிக் பாஸ் பிரபலம் விக்ரமன் காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி முன் இன்று ஆஜராகி விளக்கம் கொடுத்தார்.

சென்னை கே.கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் விக்ரமன். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாநில இணை செய்தி தொடர்பாளராக பதவி வகித்து வருகிறார். முன்பு தொகுப்பாளராக மீடியாவில் வலம் வந்த விக்ரமன் அந்த பிரபல்யம் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார்.

இந்த நிலையில்தான், விக்ரமன் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண் வழக்கறிஞர், கிருபா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், விக்ரமன் தன்னை காதலிப்பதாக கூறி நடித்து தன்னிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் பறித்து கொண்டு ஏமாற்றியதாகவும், திருமணம் செய்வதாக கூறி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.

தனது புகார் தொடர்பாக காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் பாதிக்கப்பட்ட கிருபா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததார். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் பிக் பாஸ் பிரபலம் விக்ரமன் மீது மோசடி, பாலியல் வன்கொடுமை, அவதூறு, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் பிக் பாஸ் விக்ரமன் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். பின்னர் உயரதிகாரியைச் சந்தித்த விக்ரமன், தன் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தன் மீது தவறில்லை எனிவும் தெரிவித்ததாக தெரிகிறது. அதற்கு காவல் உயரதிகாரி வடபழனி காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரியைச் சந்தித்து உரிய விளக்கத்தை அளிக்குமாறு தெரிவித்தார். இதனையடுத்து அங்கிருந்து கிளம்பினார் விக்ரமன்.

ஆணையர் அலுவலகத்தில் விளக்கம் அளித்து விட்டு வெளியே வந்த விக்ரமன், செய்தியாளர்களைக் கண்டதும் முகத்தை மறைத்துக் கொண்டு வேகமாக காரில் ஏறி புறப்பட்டுச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here