சிலாங்கூர் சுல்தானிடம் விருது பெருமையளிக்கிறது

சிலாஙகூர் சுல்தனிடமிருந்து விருது பெற்றது  மிகவும் பெருமையாக உள்ளது. குறிப்பாக பூப்பந்து விளையாட்டில் மேலும் சாதிப்பதற்கான புதிய உத்வேகத்தை அளித்துள்ளது என்று தேசிய வீராங்கனை எம். தீனா கூறினார்.

சிலாங்கூர் ஆட்சியாளர், சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷாவின்  78ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பலருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் தேசிய இரட்டையர் பூப்பந்து வீராங்கனை எம். தீனா, சுல்தானிடம் இருந்து பிகேஎஸ் எனும் விருதை பெற்றார். விருதை பெற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

சிலாங்கூர் சுல்தான் பிறந்தநாளில் இந்த விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நான் ஆரம்பத்தில் மிகவும் பதற்றமாக இருந்தேன். அதே நேரத்தில் இந்த விருதைப் பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். இவ்விருது எனக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. குறிப்பாக பூப்பந்து விளையாட்டில் மேலும் பல சாதனைகளை படைப்பதற்கான நம்பிக்கையை  இந்த விருது வழங்கியுள்ளது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here