ஜெலுதோங்கில் உள்ள 16 கடைகள் தீயில் எரிந்து நாசம்

ஜார்ஜ் டவுன்:

புக்கிட் டம்பர் லோராங் விற்பனைத் தளத்தில், ஜெலுதோங்கில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மொத்தம் 16 விற்பனைக் கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாகின.

தீ விபத்து குறித்து தமக்கு அதிகாலை 5.32 மணிக்கு அழைப்பு வந்தது என்று, ஜலான் பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செயல்பாட்டு அதிகாரி ரோஸ்லி இப்ராஹிம் கூறினார்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த பாயா தெருபோங் மற்றும் லெபு பந்தாய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய உறுப்பினர்கள் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டனர் என்றும், இந்த தீ விபத்தால் உணவு வியாபாரிகளின் (கேண்டீன்) பிரிவு C இல் உள்ள கடைகள் சுமார் 80 சதவீதம் அழிவு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

இன்று காலை 6.49 மணியளவில் தீ முற்றாக அணைக்கப்பட்டதாகவும், சம்பவத்திற்கான காரணம் மற்றும் இழப்பு தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here