மலாக்கா :
கடந்த ஆண்டு ஒரு நிறுவன இயக்குனரிடம் இருந்து RM18,000 லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சகத்தின் கீழ் உள்ள அரசு நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் துணை மேலாளர் ஒருவருக்கு நீதிமன்றம் தடுப்புக்காவல் உத்தரவை விதித்துள்ளது.
குறித்த வழக்கு தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விண்ணப்பத்தைத் தொடர்ந்து, 37 வயதான அந்தப் பெண் இன்று முதல் ஜனவரி 12 ஆம் தேதி வரை தடுப்புக்கு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இரண்டு மாத கர்ப்பிணியான சந்தேகநபர், நேற்று திங்கட்கிழமை (ஜனவரி 8) மாலை 4 மணியளவில் மலாக்காவில் உள்ள MACC அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
குற்றச்சாட்டின் ஆதாரத்தின்படி, டிஜிட்டல் உள்ளடக்க மானியத்திற்கான செயலகத்தின் பொறுப்பில் இருக்கும் குறித்த பெண், லஞ்சம் பெற்றுக்கொண்டு RM300,000 மானியத்திற்கான ஒப்புதலைப் பெறுவதற்கு ஒரு நிறுவன இயக்குநருக்கு உதவியதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், மலாக்கா MACC இயக்குனர் முகமட் ஷஹரில் சே சாத்தை தொடர்பு கொண்டபோது, MACC சட்டம் 2009 இன் பிரிவு 16 (a) (A) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.








