மலேசிய தீபகற்பத்தில் உள்ள எட்டு பகுதிகளுக்கு வெப்பமான வானிலை எச்சரிக்கை

கோலாலம்பூர்:

தீபகற்பத்தில் உள்ள எட்டு பகுதிகளில் வெப்பமான வானிலை எச்சரிக்கையை மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) விடுத்துள்ளது.

பேராக்கில் இரண்டு பகுதிகள் (லாருட் மாடாங் மற்றும் கோல கங்சார்), கோம்பாக், கிளந்தானில் உள்ள கோலாக் கிராய் மற்றும் பஹாங்கில் மூன்று பகுதிகள் (ரவூப், தெமெர்லோ, மாரான், பெந்தோங் மற்றும் ரோம்பின்) ஆகிய இடங்களுக்கு நிலை 1 வெப்ப வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

“குறிப்பிட்ட பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை குறைந்தது மூன்று நாட்களுக்கு 35 ° C முதல் 37 ° C வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று அது இன்று தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here