கோலாலம்பூர்:
Indah Water Konsortium (IWK)Sdn Bhd 30ஆம் ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் Indah Water Konsortium (IWK)Sdn Bhd திட்டத்தை மேற்கொண்டு இளைய சமுதாயத்தினர் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையின்மீது அக்கறை செலுத்துவதை ஊக்குவிக்கின்றது.

இந்தத் திட்டமானது சுற்றுச்சூழல் நிலைத்தன்மை- சுபிட்சத்தின் மீது ஆர்வம் கொண்டுள்ள புதிய பட்டதாரிகள், உயர்கல்விக்கூட இறுதியாண்டு மாணவர்களுக்காக பிரத்தியேகமாக நடத்தப்படுகிறது.

Indah Water Konsortium (IWK)Sdn Bhd கூட்டமைப்புடன் மேற்கொள்ளப்படும் இந்த திட்டமானது இளைய சமுதாயத்தினரை வலுப்படுத்தி அவர்களை சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான பாதைக்கு இட்டுச்செல்ல முனைகின்றது.

அதில் தலைமைத்துவ கூறுகள், திறன் பயிற்சிகள் வழங்கப்படுவதோடு மாணவர்கள் சமூக ஊடக பிரச்சாரத்தை வரையறுத்து மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றது.
5 நாட்களுக்கு நடத்தப்பட்ட இந்த திட்டத்தில் புத்தக கல்வி, பயிற்சி, குழு ரீதியிலான திறன் வேலைகள் ஆகியவை இணைந்து வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை Indah Water Konsortium (IWK)Sdn Bhd குழுமத்தின் இயக்குநர் நத்தலி, எச்ஆர்டி எப் அங்கீகாரம் பெற்ற பயிற்சியாளர் லலிதா முத்து சாமி வழி நடத்தினார்.

இந்த திட்டத்தில் சிறந்த பங்கேற்பாளருக்கு பரிசு வழங்கும் விழாவில் Indah Water Konsortium (IWK)Sdn Bhd தலைமைச் செயல் அதிகாரி நரேந்திரன் கலந்து கொண்டார். அவர் தமது உரையில் இந்த திட்டமானது இந்நிறுவனத்தின் 30 ஆண்டுகள் சேவையை பறைசாற்றுவது மட்டுமன்றி சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை பராமரிப்பதற்கான ஆர்வத்தை ஊக்குவிக்கின்றது எனக் குறிப்பிட்டார்.





















