கோலாலம்பூர் :
சீனாவில் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) கற்கைகளை கற்பதற்காக 200 இந்திய மாணவர்களை அரசாங்கம் அனுப்பும் என்று டத்தோ டாக்டர் அமாட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
இந்த இலக்கு வெற்றியடைந்தால், இதே திட்டத்தின் கீழ் மேலும் 200 இந்திய மாணவர்கள் அனுப்பப்படுவார்கள் என்று, தேசிய TVET கவுன்சில் தலைவரும் துணைப் பிரதமருமான அவர் சொன்னார்.
“எங்கள் பாகுபாடற்ற கல்வி அணுகுமுறையில், நாங்கள் இந்தியர்கள், மலாய்க்காரர்கள் அல்லது சீனர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் அனைத்து இனங்களுக்கும் முன்னுரிமை அளிப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம்” என்று, நேற்று பாகனில் உள்ள செக்கோலா ஜெனிஸ் கெபாங்சான் தமிழ் பள்ளிக்கு உதவி வழங்கும் விழாவில் அவர் உரையாற்றும்போது கூறினார்.























