ஷா ஆலம்:
பந்திங், சுங்கை சேடுவில் உள்ள கார்-பெயிண்டிங் பட்டறையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு கார்கள் எரிந்து நாசமாகின.
மாலை 5 மணியளவில் மின்னல் தாக்கியதால் ஏற்பட்டதாக நம்பப்படும் தீ, பக்கத்து வீட்டிற்கும் பரவியது என்று, கோலா லங்காட் மாவட்ட காவல்துறைத் தலைவர் கண்காணிப்பாளர் முகமட் அக்மல்ரிசல் ரட்ஸி கூறினார்.
பொதுமக்கள் தீயைக் கண்டு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர் என்றும், தீயணைப்பு வீரர்கள் மாலை 5.20 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தனர், அதனைத்தொடர்ந்து தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இரவு 7.20 மணிக்கு தீ முழுமையாக அணைக்கப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.



















