சிங்கையில் தீபாவளி! களை கட்டுகிறது லிட்டில் இந்தியா!

லிட்டில் இந்தியா:

தீபாவளிப் பண்டிகைக்கு முந்தைய தினம் லிட்டில் இந்தியாவில் பலகாரம், ஆடை, ஆபரணம், அலங்காரப் பொருள்கள், பட்டாசு உள்ளிட்ட பல்வேறு வகை கடைகளிலும் வியாபாரம் அமோகமாக இருப்பதாக அங்குள்ள செய்திகள் வெளியாகின.

இவ்வாண்டின் விற்பனை எதிர்பார்த்ததைவிட நல்ல முறையில் செல்கிறது. குறிப்பாக வளையல், பொட்டு வகைகளை மக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர். வாரயிறுதி யில் இன்னும் அதிகளவு விற்பனை இருக்கும் என்கின்றனர் வியாபாரிகள்.

தீபாவளி வியாபாரம் சூடுபிடித்திருந்தாலும் இப்போதுள்ள சூழலில் போட்டி அதிகம் உள்ளது. வீட்டிலிருந்தே இணையம் வழி ஆடைகளை வாங்க மக்கள் விரும்புகின்றனர். அதுமட்டுமல்லாமல் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் நடைபெற்றுவரும் எக்ஸ்போ சந் தைகள் பெரும்பாலான மக்களை கவர்கிறது. அதனாலும் வியாபாரம் பாதிப்படை கிற என்று கூறினர் சில வியாபாரிகள்.

இருப்பினும் வாடிக்கையாக வருபவர்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தீபா வளிக்கு முந்தைய நாள் இன்னும் நல்ல வியாபாரத்தை எதிர்பார்க்கிறோம் என்று சில வியாபாரிகள் கூறினர்.

“பொதுவாகவே தீமிதிக்கு பிறகு தான் பட்டாசுகள் நன்கு வியாபாரமாகும். அதிலும் கடைசி இரண்டு தினங்களில் தான் பெரும்பாலான மக்கள் பிள்ளைகளுடன் வந்து வாங்கிச்செல்வர்” என்றனர் சில வியாபாரிகள்.கடந்த ஆண்டை விட இவ்வாண்டு அதி களவு விற்பனை இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும்  சில வியாபாரிகள் என்று கூறினர்

“தீபாவளி வியாபாரம் போலவே இல்லை. சாதாரண நாட்களின் வியாபாரம் போலவே இருப்பது வருத்தமளிக்கிறது. பெரும்பாலான மக்கள் மலேசியா சென்று பொருட்களை வாங்குகின்றனர். உள்ளூர் கடைகளில் வாங்கினால் நன்றாக இருக்கும்” என்று சிலர் வருந்தினர். எனினும் லிட்டில் இந்தியா வழக்கத்துக்கு மாறாக மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here