முஸ்லீல் அல்லாதவர்களை குறை சொல்வது ஏன்? – டத்தோஶ்ரீ அயோப் கான்

வலுவான நம்பிக்கை கொண்ட உண்மையான இஸ்லாமியர்கள் லஞ்சம் வாங்க மாட்டார் என்றும்  ஊழலை ஒரு இனப் பிரச்சினையாக மாற்ற மாட்டார்கள் என்று டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை கூறுகிறார். குர்ஆனில் ஊழல் பரவலாகக் கண்டிக்கப்பட்டுள்ள போதிலும், இலஞ்சம் பெற்று பிடிபட்டவர்களில் பலர் முஸ்லிம் அல்லாதவர்கள் எனவும், அதனை சிலர் இனப்பிரச்சினையாக மாற்றியதாகவும் போலீஸ் படையின் துணைத்தலைவர் தெரிவித்தார்.

நாம் உண்மையான முஸ்லிம்களாக இருந்தால், வலுவான நம்பிக்கை இருந்தால், லஞ்சம் வாங்க மாட்டோம். மற்றவர்களைக் குறை கூற மாட்டோம். முஸ்லிம் அல்லாதவர்களைக் குறை கூறத் தேவையில்லை என்று அயோப் கான் புதன்கிழமை (ஆகஸ்ட் 7) முகநூலில் வெளியிட்ட வீடியோவில் கூறினார்.

மற்றவர்களை குறை கூறுவதற்கு பதிலாக, அதிகாரிகள் யாராவது லஞ்சம் கொடுத்தால், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி)புகாரினை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அயோப் கான் கூறினார். எம்ஏசிசி அல்லது அரசு ஏஜென்சிகளின் நடவடிக்கைகள் தவறாக சித்தரிப்பதற்காக இவர்கள் செய்திகளை திரிக்கிறார்கள் என்று அயோப் கான் கூறினார்.

லஞ்சம் வாங்குபவர்கள் மிகவும் கொடூரமான நபர்கள் என்று அவர் கூறினார். பல பேர் லஞ்சம் வாங்குவதால் லஞ்சம் வாங்குவதில் தவறில்லை என்று நினைக்கிறார்கள். அவர்கள் மிகவும் கொடூரமான நபர்கள் என்று அயோப் கான் கூறினார். ஊழலை திறம்பட தடுக்க, லஞ்சம் வாங்கும் உயர் அதிகாரிகளை பிடிப்பது முக்கியம் என்றார். லஞ்சத்தை ஊக்குவிக்கும் உயர் அதிகாரிகளை நாம் சுதந்திரமாக இருக்க அனுமதித்தால், அவர்களுக்கு கீழ் பணிபுரிபவர்கள் லஞ்சம் வாங்குவார்கள்  என்று அயோப் கான் கூறினார்.

போதைப்பொருளுக்குப் பதிலாக ஊழல் தேசத்தின் முதல் எதிரியாக மாறியுள்ளது என்றார். 1983 முதல் 2024 வரை போதைப்பொருள் எங்கள் முதல் எதிரியாக இருந்தது. 21 ஆண்டுகள் ஆகியும் ஆனால் நாங்கள் இன்னும் வெற்றிபெறவில்லை. இப்போது, ​​ஊழல் எங்கள் முதல் எதிரி என்று அவர் கூறினார். லஞ்சம் வாங்கும் கலாசாரத்தை ஒழிக்க, ஊழலுக்கு எதிரான ஒரு தலைவரை நியமிப்பது முக்கியம் என்று அயோப் கான் கூறினார். நீங்கள் லஞ்சம் வாங்கினால் அனைத்து மலேசியர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் பொருளாதாரம் மற்றும் அரசியலில் செலுத்திய செல்வாக்குதான் நாட்டில் ஊழலுக்கு அடிப்படைக் காரணம் என்று பாஸ் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் 2022இல் கூறியிருந்தார். இது மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் மலாய்க்காரர்களுக்கு விதிமுறைகளை ஆணையிட அனுமதித்துள்ளது. இது மலாய்க்காரர்களை ஊழல் மற்றும் நிதி முறைகேடுகளில் சிக்க வைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here