இந்த கலிக்காலத்தில் முருகப்பெருமானின் வழிபாடு பெரும்பாலான மக்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. கலியுக கந்தனான முருகப்பெருமான் பக்தர்களின் வேண்டுதலுக்கு உடனே செவி சாய்த்து அவர்களின் துன்பங்களை தீர்க்கும் கடவுளாக திகழ்கிறார். ஆகையால் தான் முருகப்பெருமானின் வழிபடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படியான இந்த சூழ்நிலையில் முருகப்பெருமான் நம்முடன் இருக்கிறார் என்பதை உணர்த்த சில அறிகுறிகள் உண்டு என்றும் சொல்லப்படுகிறது.
முருகன் நம்முடன் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் கந்தா என்று அழைத்தால் உடனே வந்து நம்மை காக்கும் கடவுளாக முருகப்பெருமான் விளங்குகிறார். அப்படியான முருகப்பெருமானை வணங்குபவர்களிலும் சிலர், நானும் பல காலமாக வழிபட்டு தான் வருகிறேன் என்னுடைய துன்பங்கள் தீரவில்லையே என்று மனதளவில் வருத்தத்துடன் இருப்பார்கள். அதற்கான காரணம் உங்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு சரியான நேரத்திற்காக அவர் காத்திருக்கிறார் என்பதே உண்மை. அது மட்டுமன்றி நாம் நம்பும் இறைவன் நமக்கு எப்போது எதை தர வேண்டும் என்பது.
முதலில் உங்கள் வீட்டின் அருகிலோ அல்லது முக்கியமான ஆலயத்திலோ முருகனின் அபிஷேகம் அல்லது அலங்காரத்தை நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் காணக்கூடிய வாய்ப்பை உங்களுக்கு ஏற்படுத்துவர்.
அடுத்ததாக உங்களை சுற்றி திடீரென நல்ல நறுமணம் வீசும் அது சந்தனம் அல்லது விபூதி போன்றவையாக இருப்பது. ஏனெனில் இந்த ரெண்டு வாசங்களும் கந்தனுக்கு மிகவும் சொல்லப்படுகிறது. இதை நீங்கள் வழிபாடு நேரம் தவிர பிற நேரங்களில் உணர்ந்தால் கந்தன் உங்களுடன் பயணப்படுகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதுமட்டுமின்றி நாம் வீட்டில் பூஜை அறையில் பல்லி இருப்பது அதன் சத்தம் கேட்பது போன்றவை கூட இந்த அறிகுறிகள் என்று சொல்லப்படுகிறது.
இது மட்டும் இன்றி நாம் மிகப்பெரிய துயரத்தில் இருக்கும் நாட்களில் நம்முடைய கனவில் சிறு பிள்ளைகள் முருகனின் வாகனமான மயில், சேவல் போன்றவை வருவதும் நம்முடைய மனதிற்கு நெருக்கமானவர்கள் நம்முடன் இருப்பது போல கனவு காண்பதும் முருகன் நம்முடன் இருப்பதை நமக்கு உணர்த்துகிறார் என்பதை பொருள்.






















