கணவனின் கிட்னியை ரூ.10 லட்சத்துக்கு விற்று பணத்துடன் பேஸ்புக் காதலனோடு ஓடிய மனைவி

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள சங்க்ரெய்ல் பகுதியில் வசித்துவரும் பெண், வீட்டின் நிதிசூழலை காரணம் காட்டி தந்து கணவனை சிறுநீரகத்தை விற்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளார்.

மகளுக்கு 10 வயது மகளின் வருங்கால திருமணம், குடும்பத்தின் பொருளாதார பாதுகாப்பை உறுதிசெய்வது என பல்வேறு விஷயங்களை கூறி கணவனுக்கு அவர் அழுத்தம் கொடுத்துள்ளார்.

சுமார் ஒரு வருடமாக சிறுநீரகத்தை வாங்குபவரை தேடிய கணவன், மூன்று மாதங்களுக்கு முன்பு தனது சிறுநீரகத்தை ரூ.10 லட்சத்திற்கு விற்றார். அதன்பின் அந்த பெண் தனது கணவரின் சிறுநீரகத்தை விற்று வந்த ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு பேஸ்புக் மூலம் அறிமுகமான காதலனுடன் ஓடிவிட்டார்.

இதைத்தொடர்ந்து கணவன்பராக்பூரில் தனது மனைவி காதலுடன் வசித்துவருவதை அறிந்து அங்கு சென்றுள்ளார்.பலமுறை முயற்சித்தபின் கடைசியாக மனைவி கதவை திறந்து அங்கிருந்து போகுமாறும் விரைவில் விவாகரத்து நோட்டிஸ் வழங்குகிறேன் எனவும் கூறி கணவனை துரத்தியுள்ளார். மனமுடைந்த கணவன் தற்போது போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here