பகாங் பெந்தோங்கில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது

இன்று காலை 10.26 மணிக்கு பகாங் பெந்தோங் அருகிலுள்ள ஹெலிகாப்டர் தரையிறங்கும் இடத்தில் Bell 206L4 வகை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை மலேசியா சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAM) உறுதிப்படுத்தியது.

இந்த ஹெலிகாப்டர் MHS Aviation Berhad நிறுவனம் வாடகைக்கு எடுத்து, விமான பணிக்காக இயக்கப்பட்டு வந்தது. இன்று காலை 10.18 மணிக்கு, கோலாலம்பூர் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் அமைந்துள்ள விமான தகவல் தளத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்க உள்ளதாக தகவல் பதிவாகியிருந்தது.

இந்த ஹெலிகாப்டர் விபத்தில், தரையில் இருந்த பணியாளர்களில் ஒருவர் மரணம் அடைந்த வேளையில் ஹெலிகாப்டர் விமானி பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மலேசியா போக்குவரத்து அமைச்சின் கீழ் செயல்படும் விமான விபத்து விசாரணை பணிக்குழுவால், 2016 ஆம் ஆண்டு விமானப் போக்குவரத்து விதிமுறைகளின் அடிப்படையில் மேல் விசாரணை நடத்தப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here