மலேசியாவின் பேரரசியார் ராஜா ஸரித் சோபியா அவர்களின் பெயரை பயன்படுத்தி, உருவாக்கப்பட்டுள்ள இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்று போலியானது என்று போலீஸ் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக, இன்று பேரரசர் சுல்தான் இப்ராஹிம் அவர்களின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் அந்த இன்ஸ்டாகிராம் கணக்கின் ஸ்கிரீன் ஷாட்டுடன் அரசவை உறுதிப்படுத்தியுள்ளது.
“இந்த கணக்கு, பேரரசியார் அவர்களின் பெயரை தவறாக பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி கணக்காகும் என்று தெரிவிக்கப்பட்டது.
“தனிநபர் அடையாளத்தை மோசடி செய்வது ஒரு குற்றச் செயல். மேலும் சட்ட நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்” என போலீஸ் எச்சரித்திருக்கிறது.




















