மலேசியக்கிண்ண காற்பந்தாட்டம்; வரும் 28 ஆம் தேதியை பொதுவிடுமுறையாக அறிவித்தது ஜோகூர்

கோலாலம்பூர்:

வரும் ஏப்ரல் 28ஆம் தேதியை பொதுவிடுமுறையாக ஜோகூர் மாநில அரசு அறிவித்துள்ளது.

மலேசியக்கிண்ணக் காற்பந்துப்போட்டியின் இறுதியாட்டத்தில் JDT அணி இடம்பெறுவதைத் தொடர்ந்து, JDTயின் சிறந்த சாதனைகளுக்கு வலுவான ஆதரவு, அதன் பாராட்டுக்கான அறிகுறியாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபிஸ் காசி கூறினார்.

மேலும் நாளை நடைபெறவிருக்கு ஸ்ரீ பஹாங் அணிக்கு எதிரான மலேசியா கிண்ண கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்திற்கு வெற்றிகரமாக முன்னேறியதற்காக JDT அணிக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

ஜோகூர் சுல்தான் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயிலின் உத்தரவின் அடிப்படையில், ஜோகூர் அரசு ஏப்ரல் 28 திங்கட்கிழமை மாநிலத்தில் பொது விடுமுறை நாளாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது என்று அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here