கோயில் அருகே தங்கச் சங்கிலி பறிப்பு: இருவருக்கு போலீஸ் வலைவீச்சு

கோலாலம்பூர்:

ம்போங் பாண்டடானில் உள்ள ஒரு கோயிலுக்கு வெளியே நேற்று ஒரு பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியை பறித்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

நேற்று பிற்பகல் 2 மணியளவில், அந்தப் பெண் கோயில் அருகே நிறுத்தப்பட்டிருத்த தனது காருக்கு சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது என்று, வாங்சா மாஜு காவல் துறைத் தலைவர் சியாருல் அனுவார் அப்துல் வஹாப் கூறினார்.

“மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத ஆண்கள் திடீரென வந்து அவர் அணிந்திருந்த தங்க்ச் சங்கிலியைப் பறித்தனர். அப்போது அங்கிருந்த பல ஆண்கள் சந்தேக நபர்களைப் பிடிக்க முயன்றனர், ஆனால் முடியவில்லை,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் மருமகன் தனது அத்தைக்கு உடல் ரீதியாக எந்த காயமும் ஏற்படவில்லை என்றும், ஆனால் 60 வயதான அவர் இன்னும் அதிர்ச்சி நிலையில் இருப்பதாகவும் கூறினார்.

மேலும் தற்போது போலிஸ் நிலையத்தில் புகார் அளிக்க மறுத்துவிட்டதாக அவர் கூறினார்.

சந்தேக நபரைத் தடுக்க முயன்றபோது எனது தந்தையின் கையில் காயம் ஏற்பட்டது என அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here