மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் துன் டைம் சைனுடின் மீதான ஊழல் வழக்கு தொடர்பில், அவரின் 22 குடும்ப உறுப்பினர்களின் சொத்துகள் உட்பட சுமார் RM 3,000 மில்லியன் மதிப்பிலான சொத்துகளை SPRM முடக்கியுள்ளது.
மேலும் அவரின் மனைவி உட்பட அவரின் சொத்துகளுடன் நேரடி தொடர்பில் உள்ள மற்ற கிளை நிறுவனங்களின் சொத்துகளையும் முடக்கியிருப்பதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தெரிவித்துள்ளது.
தற்போது முடக்கப்பட்டிருக்கும் சொத்துகளில் பெரும்பானவை மலேசியாவுக்கு வெளியில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















