கோலாலம்பூர்,
மலேசியாவின் முன்னணி மின்சார நிறுவனமான Tenaga Nasional Berhad, தனது AI தொழில்நுட்பத்தின் வழி மேற்கொண்ட முன்கூட்டிய பராமரிப்பு திட்டத்தை திறம்பட செயல்படுத்தியமைக்காக ASEAN Innovation Business Platform புத்தாக்க விருது 2025ஐ வென்றுள்ளது.
இத்திட்டம், மண்ணடியில் போடப்பட்ட 11kV கேபிள் கட்டமைப்புகளில் 2 ஆண்டுகள் முன்பே பழுதுகளை கண்டறிந்து, சரியாக கணிக்க 80% துல்லியத்துடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் செயல்படுகிறது. இதனால் 15-20% கேபிள் பழுதுகளை குறைத்து, வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தியுள்ளது.
சிலாங்கூர் பகுதியில் முதலில் சோதனைக்காக செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம், TNB-வின் உள்நாட்டு வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டு, பராமரிப்பு திட்டங்கள் முறையாக வகுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் Malaysia Smart Utility 2030 வழிகாட்டி திட்டத்துடன் இணைந்து, கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்கும் சிறந்த முன்னேற்றமாக உள்ளது.
இந்த விருது, Petronas, AirAsia, Sime Darby, Allianz உள்ளிட்ட பெரும் நிறுவனங்களை பின்தள்ளி வென்றதாக குறிப்பிடப்படுகிறது. இதன்மூலம் மெஷின் லெர்னிங் தொழில்நுட்பத்தின் மூலம் முக்கிய பகுதிகளில் நிலைத்த மின்சாரம் வழங்கும் திறனை உயர்த்தியிருக்கிறது. இத்திட்டம், மலேசியாவின் AI சாத்தியங்களை முன்னிறுத்தும் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது என TNB தெரிவித்துள்ளது. .









