இஸ்தானா நெகாரா அதிகாரி சைலானி ஹாசிமுக்கு பேரரசர் நன்றி பாராட்டு கடிதத்தை வழங்கினார்

கோலாலம்பூர்,

இஸ்தானா நெகாராவின் அரண்மனை நிர்வாக அலுவலர் Datuk Zailani Hashim ஓய்வு பெறுவதை முன்னிட்டு பேரரசர் சுல்தான் இப்ராஹிம் இன்று நன்றி பாராட்டும் கடிதத்தையும் நினைவுப் பரிசையும் வழங்கினார்.

இன்று இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற நிகழ்வு குறித்து, பேரரசரின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

“2024 முதல் இஸ்தானா நெகாரா அரண்மனை நிர்வாக அலுவலராக தங்கியிருந்து Datuk Zailani Hashim வழங்கிய அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்காக, பேரரசர் தனது ஆழ்ந்த நன்றியை தெரிவித்தார்” என கூறப்பட்டுள்ளது.

Datuk Zailani Hashim, இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஓய்வுபெற உள்ளார். அவருக்கு மாற்றாக Tan Sri Dr Azmi Rohani நியமிக்கப்பட்டுள்ளார்.

பேரரசரிடம் நேரடியாக நன்றி பெறும் பெருமை மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்று என இஸ்தானா வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here