நீலாய் :
நெகிரி செம்பிலானில் நேற்று மதியம் 2 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்த கனமழையால் அங்கு பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தாமான் செமாராக் மற்றும் பெக்கான் லாமா, நீலாய் ஆகியவை அடங்கும் என்று நீலாய் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் பகார்யா முகமட் சாலே கூறினார்.





















