சம்சுல் ஹரிஸின் மரணம்: புக்கிட் அமான் சிறப்பு பிரிவு விசாரணை மேற்கொள்ளும்

கோலாலம்பூர்:

பாலாப்ஸ் கேடட் அதிகாரி சம்சுல் ஹாரிஸ் ஷம்சுடினின் மரணம் தொடர்பான விசாரணையை புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு துறையின் சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு (D5) இன்று முதல் பொறுப்பேற்றுள்ளது என்று குற்றப் புலனாய்வு துறையின் இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் சம்சுல் ஹாரிஸ் மரணம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தொடங்கிய விசாரணை, ஷா ஆலம் உயர் நீதிமன்றம் நேற்று அவரது கல்லறையை மீண்டும் தோண்டி இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்த அனுமதி அளித்ததை அடுத்து புக்கிட் அமானின் சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

“நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை முழுமையாக நிறைவேற்றவும், விசாரணை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் போலீஸ் உறுதியாக செயல்படும்,” என்று குமார் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here