விவேகமாக விதையுங்கள்

“அன்பெனும் விதையை விதையுங்கள். மிகவும் உன்னத உணர்வான அன்பே உங்கள் உள்ளத்தில் நிறைந்திருக்கும்”

இந்த  வாழ்வெனும் தோட்டத்தில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நிலமும் பலவிதமான விதைகளும் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு விதையும் நாம் விதைத்ததும் வளர்ந்து மரமாகும். அதன் தனிப்பட்ட இயல்பு உங்களுக்குப் பிடிக்கலாம் ஒருவேளை, பிடிக்காமலும் போகலாம். கேள்வி என்னவென்றால்: உங்களுக்குக் கொடுக்கப்பட்ட விதைகளில் எந்த விதைகளை நீங்கள் விதைத்திருக்கிறீர்கள் என்பதுதான். 

கோபமென்ற விதையுள்ளது, கருணையென்ற விதையுமுள்ளது. குழப்பமென்ற விதையுள்ளது, தெளிவெனும் விதையுமுள்ளது. வெறுப்பென்ற விதையுள்ளது,, அன்பென்ற விதையுமுள்ளது. புரிந்துணர்வென்ற விதையுமுள்ளது. மேலும் சந்தேகமென்ற விதையும் குழப்பமென்ற விதையுமுள்ளது. நாம் இவ்விதைகளை விதைப்பதோடு மட்டுமல்ல, அவற்றைப் பராமறித்து தண்ணீரூற்றி, பத்திரமாகப் பாதுக்காத்தால்தான் அது நன்றாகவும் உறுதியாகவும் வளரும். உங்கள் வாழ்க்கையெனும் தோட்டத்தில் நீங்கள் எந்த விதையை விதைக்கிறீர்களோ அதுவே மரமாக வளரும், அம்மரத்தின் நிழலில்தான் நீங்கள் இறுதியாக இலைப்பாருவீர்கள். அப்போது நீங்கள் எந்தளவிற்குச் சுகத்தை உணர்வீர்கள் என்பது  எந்த மாதிரியான விதைகளை நீங்கள் விதைத்தீர்கள் என்பதைப் பொருத்துள்ளது.  

ஒரு விதையை விதைத்து அதைப் பராமறித்தால் அது ஒரு மரமாகிவிடும். நீங்கள் எதைப் பராமறித்திருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பினால் உங்களின் அகக்கதவைத் திறந்து உங்கள் உள்ளேயிருக்கும் தோட்டத்தைப் பாருங்கள். அங்கு அந்த மரங்கள் யாவுமிருக்கும்.

ஆசையெனும் விதையை நீங்கள் விதைத்திருக்கலாம். சந்தேகம் எனும் விதையையும் நீங்கள் விதைத்திருக்கலாம் சந்தேகமெனும் மரத்தின் இயல்பென்னவென்றால், அது எல்லாவற்றையுமே சந்தேகிக்கும். நம்மில் பெரும்பாலோர் கோபமென்ற விதையைத்தான் விதைத்துள்ளனர். கோபமென்ற மரத்தின் அருகே போகலாம் ஆனால், அதிலிருந்து கொட்டுவது நமக்குப் பிடிக்காது. ஆகையால், அம்மரத்தின் அருகே செல்லவே கூடாது என்று நீங்கள் உங்களுக்குள்ளே உறுதியெடுத்துக்கொள்வீர்கள். காரணம், கோபத்தால்  ஏற்பட்ட மனக்கசப்பையும் வெறுப்பையும் மனதிலிருந்து அகற்ற ஒரு வாழ்நாளாகும்.  

நீங்கள் அன்பெனும் விதையை விதைத்தீர்களா? உங்கள் வாழ்க்கையில் அன்பெனும் விதையை விதையுங்கள் மிகவும் உயர்வான உணர்வான அன்பே உங்கள் உள்ளத்தில் நிறைந்திருக்கும். தெளிவெனும் விதையை விதையுங்கள், தெளிவே உங்களுக்குப் பரிசாக கிடைக்கும். கருணையை விதையுங்கள், கருணையே உங்களுக்கு பரிசாகக் கிடைக்கும். 

கடந்த 60 வருடங்களாக திரு பிரேம் ராவத் அவர்கள் தனி ஒரு  மனிதனின் உள் அமைதியைப் பற்றி உலகமுழுவதும் உறையாற்றி வருகிறார். நாடாளுமன்றம் முதல் சிறைகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், தொலைக்காட்சிஸ்டூடியோக்கள்  வரை பல்வேறு இடங்களில் அவர் உரையாற்றியுள்ளார்.

மேலும் தெரிந்துகொள்ள, கீழே உள்ள இணைப்பை பார்வையிடுங்கள்:

www.premrawat.com

ullathinkural.com

www.timelesstoday.tv

https://www.youtube.com/@PremRawatOfficial

https://youtube.com/@sovtamil6222?si=Bhum5Mk7Ihmd9NLB

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here