நன்றி நவில்க

இந்த மூச்சும் உயிரும் ஒரு வரமாகும். இதை உணரும் பொழுது  நாம் நன்றி கூறும் விதம் இவ்வுலகத்தில் தனித்துவமானதாக இருக்கும்.”

இந்தப் பூமியில் உயிரோடிருக்கும்  நாம் அனைவரும் வேறுபட்டவர்களாக இருந்தாலும், நன்றி கூறும் திறமை அனைவரிடமும் பொதுவாக உள்ளது. நீங்கள் இந்த உயிருக்காக? இந்த மூச்சுக்காக  இன்றைய பொழுதுக்காக,  இந்த வாழ்வுக்காக நன்றி கூறியிருக்கிறீர்களா? இது மனித வாழ்வின் மிக அடிப்படையான உண்மை ஆனால் கவனிக்கப்படாமல் உள்ளது.

நண்பர்களே, ஒருநாள் வரும். நிச்சயமாக நன்றி கூறுவீர்கள். கடைசி மூச்சு விடுவது மிக முக்கியமானதாக இருக்கும்பொழுது. அப்போது பேசுவதை நிறுத்தி விடுவீர்கள், சிந்திப்பதை நிறுத்திவிடுவீர்கள். ஒரே விஷயத்தின் மீதுதான் உங்களின் கவனம் இருக்கும். வாழ்நாள் முழுவதும் அலட்சியமாகக் கருதப்பட்ட ஒன்றின் மீது அத்தருணத்தில் முழுகவனம் வைப்பது அதிமுக்கியமானதாக இருக்கும். இன்னும் ஒரு மூச்சை எடுக்க வேண்டும். இன்னும் ஒன்று, மேலும் ஒன்று என முழுகவனமும் மூச்சின்மேல் இருக்கும். வாழ்வில்எவ்வளவோ விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன, அவையெல்லாம் ஒரு பொருட்டல்ல. ஆனால், இன்று இந்த மூச்சு உங்களுக்குள் வந்து போவதால் மட்டுமே உயிரோடு இருக்கிறீர்கள். அதுதான் உங்களுக்கு முக்கியமானதாக இருக்க வேண்டும். மக்களுக்கு  “அது சுயநலம்” என நினைக்கத் தோன்றும். அப்படியென்றால், உங்களின் மூச்சின் ஒருப்பகுதியை இன்னொருவருக்குக் கொடுத்துவிடுகிறேன் என ஓர் உயில் எழுதுங்களேன். முடியாதல்லவா? நீங்கள் எவ்வளவு தயாள உள்ளம் கொண்டவர் ஆயினும் உங்களால் ஒரு மூச்சைக்கூட யாருக்கும் தானமாகக் கொடுக்க முடியாது. உங்களால் செய்ய முடிவதெல்லாம் பெற்றுக்கொண்டே இருப்பதுதான். அதை நீங்கள் பெற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்ளும்போதுதான் உயிரோடிருப்பதன் அர்த்தத்தை உணரத் தொடங்குவீர்கள். . மூச்சும் உயிரும் ஒரு வரமாகும் – அது நமக்கே உரியதானது, எனவே, இந்த மூச்சை நிராகரிக்காதீர்கள். நாம் பெறும் ஒவ்வொரு மூச்சும் வாழ்வின் ஓர் அரிய பரிசு. என்று உணர்வுடன் வாழும்போது நன்றியுணர்வு எழுகிறது. நன்றியுணர்வு எழும்போது இந்த வாழ்வு மகத்தானது என்பதை உளமாற ஏற்றுகொள்வோம். 

கடந்த 60 வருடங்களாக திரு பிரேம் ராவத் அவர்கள் தனி ஒரு  மனிதனின் உள் அமைதியைப் பற்றி உலகமுழுவதும் உறையாற்றி வருகிறார். நாடாளுமன்றம் முதல் சிறைகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், தொலைக்காட்சிஸ்டூடியோக்கள்  வரை பல்வேறு இடங்களில் அவர் உரையாற்றியுள்ளார்.

மேலும் தெரிந்துகொள்ள, கீழே உள்ள இணைப்பை பார்வையிடுங்கள்:

www.premrawat.com

ullathinkural.com

www.timelesstoday.tv

https://www.youtube.com/@PremRawatOfficial

https://youtube.com/@sovtamil6222?si=Bhum5Mk7Ihmd9NLB

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here