மீன் பிடித்தபோது படகு கவிழ்ந்தது; ஜேகேஆர் ஊழியர் ஆற்றில் மூழ்கினார்!

ரொம்பின்:

இன்று கெடாய்க் அசால் ஆற்றில் மீன் பிடித்து கொண்டிருந்த சமயத்தில் படகு கவிழ்ந்த சம்பவத்தில் பொதுப்பணி இலாகா ஊழியர் ஒருவர் நீரில் மூழ்கியதாக சந்தேகிக்கப்படுகிறது.

இச்சம்பவம் காலை 10 மணியளவில் நிகழ்ந்ததாக பகாங் தீயணைப்பு- மீட்புப் படை தொடர்பு பிரிவு அதிகாரி ஸுல்ஃபடி ஸாக்காரியா தெரிவித்தார்.

முன்னதாக இருவர் பயணித்த அந்த படகு, வலை கயிற்றில் மோதியதை அடுத்து அவர் ஆற்றில் வீசப்பட்ட நிலையில் மற்றொருவர் உயிர் தப்பினார்.

அந்த நபர் காலை 10.28 மணியளவில் அவசர அழைப்பு
செய்ததை அடுத்து மீட்பு படையினர் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்தனர்.

அதே சமயம் மழை காலம் என்பதால் ஆற்றில் நீரோட்டம் வேகமாக இருப்பதாகவும் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் நீரின் அளவு சுமார் 2 மீட்டர் ஆழம் என்றும் அவர் விவரித்தார்.இதனிடையே மீட்பு பணிகளை போலீஸ், பொது பாதுகாப்பு படையினர், கிராம மக்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here