கோலாலம்பூர், பிப்ரவரி 24, 2026:
வருகின்ற நோன்புப் பெருநாளை முன்னிட்டு, தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கு 500 ரிங்கிட் சிறப்பு நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Gred 15 மற்றும் அதற்குக் குறைவான தரத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்களுக்கும் இந்த நிதியுதவி வழங்கப்படும்.
வரும் மார்ச் 13-ஆம் தேதி முதல் இந்த நிதி விநியோகிக்கப்படும்.
அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் தங்களின் பண்டிகைக் கால முன்னேற்பாடுகளைத் தயார் செய்வதற்கு உதவும் ஒரு முயற்சியாக இது வழங்கப்படுகிறது எனப் பொதுச் சேவைத் துறை தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு குறைந்த வருமானம் பெறும் அரசு ஊழியர்களுக்குப் பெருநாள் காலத்தில் பெரும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.






















