ம.இ.கா ஒன்றும் செய்யவில்லை என்று சொல்பவர்கள் ம.இ.கா எதை செய்யத் தவறியது? துன் சாமிவேலு இந்தியர்களுக்காக என்னதான் செய்யவில்லை? என்பதை சொல்ல முடியுமா என ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பினார். கேள்வி கேட்பவர்களுக்கு பதில் சொல்ல நாங்கள் தயங்கவுமில்லை என நேதாஜி மண்டபத்தில் இன்று நடைபெற்ற துன் சாமிவேலுவின் 90ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நினைவலைகள் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று அவர் பேசினார்.
ம.இ.கா இன்று ஒரு பொருளாதார பலமுள்ள கட்சியாக நெஞ்சை நிமிர்த்தி நிற்பதற்கு அடித்தள மிட்டவர் துன் சாமிவேலு என்பதை யாராலும் மறுக்க இயலாது. மலேசிய இந்திய மக்களின் கூக்குரலாக இருந்தவர் அவர். தற்போது கடன் இல்லாத ஒரு அரசியல் கட்சியாக ம.இ.கா இருக்கிறது என்பதையும் அவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய விக்னேஸ்வரன், மலேசிய இந்தியர்களுக்கா குரல் கொடுக்க வலிமை உள்ள ஒரே கட்சியாக ம.இ.கா மட்டுமே உள்ளது என்றும் இன்று கட்சியின் அருமையையும் முக்கியத்துவத்தையும் இந்திய மக்கள் உணர்கிறார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டி பேசினார்.
ராமேஸ்வரி ராஜா










