சிங்கப்பூரில் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடும் நடிகர் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் படத்திற்கு படம் தன்னை ஒரு நல்ல நடிகராக நிரூபித்து வருகிறார் சிவகார்த்திகேயன். கடைசியாக இவரது நடிப்பில் ‘பராசக்தி’ என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, அதர்வா, ரவி மோகன் என பலர் நடித்த இப்படம் 2026 பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி இருந்தது, பெரிய அளவில் வெற்றி என இல்லாமல் லாபம் கொடுக்கும் அளவிற்கு ஓடியது.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ‘சிவகார்த்திகேயன் புரடக்‌ஷன்ஸ்’ மூலம் புதிய இயக்குநர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கி வருகிறார். குறைந்த பட்ஜெட்டில் சிறந்த படங்களை இவரது நிறுவனம் தயாரித்து வருகிறது. சிவகார்த்திகேயன் இப்போது தயாரிப்பாளராகவும் வெற்றிக்கண்டு வருகிறார்.

இவரது தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் ‘தாய்கிழவி’. நடிகை ராதிகாவின் அசத்தலான நடிப்பில் தயாராகி வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் செம வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

தயாரிப்பாளராக வெற்றிக்கண்டுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். தனது மனைவி, மகள், மகன்களுடன் சிவகார்த்திகேயன் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றள்ளார், அங்கே எடுத்த புகைப்படங்களை ஆர்த்தி தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here