நாட்டில் ஒரே மாதத்தில் 36,141 புதிய வாக்காளர்கள் பதிவு

கோலாலம்பூர்:

மலேசியாவில் கடந்த பிப்ரவரி மாதம் 18 வயதை எட்டிய 36,141 பேர், புதிய வாக்காளர்களாகத் தானாகவே (Automatic Registration) பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். பிப்ரவரி மாதத்திற்கான இந்தத் துணைநிலை வாக்காளர் பட்டியல் தற்போது பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையத்தின் (EC) செயலாளர் கைருல் ஷாரில் இத்ரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள முக்கியத் தகவல்கள்:

பிப்ரவரி வரை 18 வயதை பூர்த்தி செய்த 36,141 பேர் தானாகவே இணைக்கப்பட்டுள்ளனர்.

தொகுதி மாற்றம் செய்த 14,129 வாக்காளர்களும், வாக்காளர் பிரிவு அல்லது தகுதிநிலையை மாற்றிக்கொண்ட 2,322 பேரும் இந்தப் புதிய பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மார்ச் 18 முதல் ஏப்ரல் 16 வரை (30 நாட்களுக்கு) பொதுமக்கள் இந்தப் பட்டியலைச் சரிபார்த்துக்கொள்ளலாம்.

தங்கள் பெயர் பட்டியலில் விடுபட்டிருந்தாலோ அல்லது விவரங்களில் திருத்தம் இருந்தாலோ, சம்பந்தப்பட்டவர்கள் பின்வரும் முறைகளில் முறையிடலாம்: அத்தோ https://myspr.spr.gov.my என்ற தளத்திற்குச் சென்று ‘படிவம் சி’ (Form C) மூலம் விண்ணப்பிக்கலாம்.

அந்தந்த மாநிலத் தேர்தல் அலுவலகங்களுக்கு நேரில் சென்றும் கோரிக்கை விடுக்கலாம்.

கடந்த மாதம் 18 வயதை எட்டியவர்களும், தொகுதி அல்லது தகுதிநிலை மாற்றம் கோரி விண்ணப்பித்தவர்களும் தங்களின் விவரங்கள் சரியாகப் பதிவாகியுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here