களிமண் தரை போட்டியான இத்தாலி பொது அனைத்துலக டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர் , வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில், நம்பர் 3 வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப், நம்பர் 7 வீராங்கனையான உக்ரெய்னின் எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஸ்விடோலினா 6-4 என முதல் செட்டை வென்றார். இதற்கு பதிலடியாக 2ஆவது செட்டை 7-6 (7-3) என கோகோ காப் கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3ஆவது செட்டை ஸ்விடோலினா 6-2 என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். ஸ்விடோலினா மூன்றாவது முறையாக இத்தாலி பொதுவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.









