அம்பாங்கிலுள்ள ஒரு ஹோட்டல் கூரையிலிருந்து விழுந்த தண்ணீர் தொட்டி – 2 கார்கள் சேதம்!

கோலாலம்பூர்:

அம்பாங் பாயிண்ட் (Ampang Point) அருகே உள்ள ஒரு ஹோட்டல் கட்டிடத்தின் மேல் பகுதியிலிருந்து பிரம்மாண்ட தண்ணீர் சேமிப்புத் தொட்டி ஒன்று கீழே விழுந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்கள் பலத்த சேதமடைந்தன.

நேற்று இரவு (ஜூலை 18) அம்பாங் பகுதியில் பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளிக் காற்றின் காரணமாக இந்த விபத்து நேரிட்டுள்ளது. ஹோட்டலுக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் மீது இந்தத் தண்ணீர் தொட்டி விழுந்ததாக நம்பப்படுகிறது என்று, அம்பாங் ஜெயா மாவட்டப் போலீஸ் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் கைருல் அன்வார் காலிட் கூறினார்.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்களோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை.

சேதமாடைந்த இரண்டு வாகனங்களின் உரிமையாளர்களும் இது குறித்துப் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், அந்தத் தண்ணீர் தொட்டி ஹோட்டல் கட்டிடத்தின் கூரையிலிருந்து (Rooftop) விழுந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here